NATIONAL

உயர் வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் பொருளாதார இடைவெளியைக் குறைக்கும்!

கோலாலம்பூர், நவ.7-

உயரிய மதிப்பிலான பொருளாதாரம் மற்றும் உயர் வருமானம் தரும் வேலைகளை உருவாக்குவது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுவதால், வேலை செய்யும் தரப்புகளுக்கு இடையிலான பொருளாதார இடைவெளி குறைக்கப்படும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று பொருளாதார விவகாரத் துறை துணையமைச்சர் டாக்டர் முகமது ராட்ஸி முகமது ஜிடின் கூறினார்.

வேலை பார்ப்போரின் வசிப்பிடம், இனம் மற்றும் துறை ஆகியவற்றினால் இவர்களுக்கிடையிலான பொருளாதார இடைவெளி பெரிய அளவில் இருப்பதாக கூறிய அவர் 2030 கூட்டு வளப்பத்தை நோக்கி எனும் தேசிய திட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் தரமான வாழ்க்கை முறையை அரசு ஏர்படுத்தும் என்றார்.

இந்தப் பொருளாதார இடைவெளிக்கு முக்கிய காரனமாக இருப்பது, பி40 தரப்பினர் ஊதியம் கிடைக்கும் துறையை மட்டுமே சார்ந்திருப்பதே ஆகும். மேலும் கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கு இத்தரப்பினரிடம் சொத்துகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ஹாசான் பாஹ்ரோம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் துணையமைச்சர் மேற்கண்டவாரு பேசினார்.


Pengarang :