EXCO Perumahan Dan Kehidupan Bandar, Haniza Mohamed Talha berucap sempena Majlis Penyerahan Sijil Kelayakan Menduduki Dan Kunci Rumah Kepada Pembeli Projek Perumahan Estana Court, Hulu Kelang pada 1 Mac 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

ஒதுக்கீடுகளை ஒன்று சேர்த்து பொது மக்களுக்கு உதவி – லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், ஏப்.3-

சட்டமன்ற உறுப்பினருக்கான ஒதுக்கீடு, ஆட்சிக் குழு மற்றும் கிராமத் தலைமைத்துவம் ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப் பெறும் தொகையை ஒன்றாக சேர்த்து கணக்கிட்ட பின்னரே தேவைப்படுவோருக்கு உதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹானிஸா தால்ஹா கூறினார்.

மூன்று தரப்புகளின் உதவித் தொகை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் பகிர்ந்தளிப்படும் என்றார் அவர்.
ஒன்றுசேர்க்கப்பட்ட பின்னர் கிடைக்கப் எறும் தொகை பெரியதாக இருக்கும் அதே வேளையில் உதவி பெறுவோர் பட்டியலும் குளறுபடி இல்லாமல் சீராக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30,000 ரிங்கிட் அறிவித்துள்ள வேளையில், ஆட்சிக் குழு ரிம. 10 ஆயிரம் மற்றும் கிராமத் தலைவர் ரிம. 5 ஆயிரம் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளன.


Pengarang :