dav
SELANGORUncategorized @ta

ரவாங்கில், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரிம1.3 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது

 

ரவாங், டிசம்பர் 22:

பரிவுமிக்க சிலாங்கூர் மாநில அரசாங்கம், 17-வது மைல், தாமான் ஜாத்தியில் அமைந்துள்ள சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்தின் (பிகேஎன்எஸ்) மைதானத்தில் பல்நோக்கு கட்டிடம் நிர்மாணிக்கும் பணிக்கு ரிம 900,000-ஐ ஒதுக்கீடு செய்துள்ளது என்று ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ தெரிவித்தார். இந்த சுற்று வட்டார பொது மக்களுக்கு இந்த மேம்பாட்டு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

”   இந்த மைதானத்தை பற்றி பல்வேறு புகார்களை பெற்றுள்ளேன். இதன் அடிப்படையில் பல ஆலோசனைகளுக்கு பிறகு தற்போது செயல் வடிவமாக செயல்படுத்தப் பட்டுள்ளது. பல்நோக்கு கட்டிடமாக நிர்மாணிக்கப் பட்டு வரும் இந்த செயல் திட்டம் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ‘பசுமை நிற’ கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது,” என்று 17-வது மைல், தாமான் ஜாத்தியில் அமைந்துள்ள சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்தின் (பிகேஎன்எஸ்) மைதானத்தில் பல்நோக்கு கட்டிடம் நிர்மாணிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்யும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

பிகேஎன்எஸ் மைதானம் 3.22 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு சுவர், கால்பந்து திடல், ‘மினி கிரேன்ட்ஸ்தேண்ட்’, கழிவறை, ஆரோக்கிய தளவாடங்கள், பல்நோக்கு விளையாட்டு மைதானம், பூங்கா நாற்காலிகள் போன்ற பல்வேறு பொது வசதியுடன் கூடிய மேம்பாட்டு திட்டத்தை மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கான் பெய் நீ தெரிவித்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :