NATIONAL

ஜனவரி 7-இல் பாக்காத்தான் ஹராப்பான் மாநாடு

ஷா ஆலம், டிசம்பர் 2:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வரும் ஜனவரி 7 ஆம் தேதியில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் மாபெரும் மாநாடு ஷ அலாம் ஐடியல் பன்னாட்டு மையத்தில் (IDCC) நடைபெறவுள்ளது.
நடைபெறவிருக்கும் பாக்காத்தான் மாநாட்டில் துன் மகாதுர்,டத்தோஸ்ரீ வான் அசிசா,முகமட் சாபு,டான்ஸ்ரீ முகிடின் யாசின் மற்றும் லிம் குவான் எங் உட்பட கூட்டணியின் முதன்மை தலைவர்களோடு அனைவரும் கலந்துக் கொள்வார்கள்.

காலை மணி 9 தொடங்கி மாலை மணி 5 வரை நடைபெறும் இம்மாநாட்டில் முதன்மை தலைவர்கள் அனைவரும் தங்களின் கருத்தியலை பதிவு செய்வார்கள். அதுமட்டுமின்றி,பல்வேறு பின்னணியை கொண்ட தரப்பு பிரதிநிதிகளின் கருத்தியலும் அம்மாநாட்டில் பதிவு செய்யப்படும்.குறிப்பாக விவசாயிகள,முன்னாள் இராணுவம்,முன்னாள் பொது ஊழியர்,பெல்டா பிரதிநிதி மற்றும் கலைஞர்கள் ஆகியோரின் கருத்துக்களும் மக்கள் மேடையில் பதிவு செய்யப்படும்.

நடைபெறவிருக்கும் மாநாடு நாட்டின் 14வது பொதுத் தேர்தலை மட்டும் இலக்காய் கொண்டிருக்காமல் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் கொண்டிருக்கும்.அதேவேளையில்,பாக்காத்தான் அரசாங்கத்தின் சலுகைகள் திட்டங்கள் குறித்தும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 14வது தேர்தலை குறி வைத்து முன்னெடுக்கப்படும் இம்மாநாட்டில் மக்களின் எண்ணங்களையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் படம்பிடித்து காட்டும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் பெரும் அளவில் அறிவிக்கப்படும்.மேலும்,தேசிய முன்னணிக்கு மாற்று அரசாங்கம் பாக்காத்தான் ஹராப்பான் தான் என்பதை உறுதி செய்யும் வகையிலான மாநாடாய் அஃது அமையும் என்றும் கூறப்படுகிறது.

#வீரத் தமிழன்


Pengarang :