NATIONAL

2018இல் உள்நாட்டு உற்பத்தி 5.0 விழுகாடாய் அமையும்

ஷா ஆலம், டிசம்பர் 2:

2018இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.0 விழுகாடாய் அமையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.உலக நிலையிலான எண்ணெய் உட்பட இதர அடிப்படை உற்பத்திகள் நிலையாக இருக்கும் பட்சத்தில் மலேசியாவின் நிலை இவ்வாறு அமையும் என கருதப்படுகிறது.
ஓசிபிசி வங்கியின் உலகளாவிய 2018 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிம் மூலம் இஃது தெரிய வந்துள்ள வேளையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடு மற்றும் வர்த்தகங்கள் பெரும் உதவியாக இருப்பதாகவும் அது சுட்டிக்காண்பித்தது.

மேலும்,பட்ஜெடின் பின்னணியின் மூலம் ஒதுக்கப்பட்ட மொத்த டெபசிட் மூலமும் பயனீட்டாளர் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில்,உள்நாட்டு விலையினை கண்காணித்தல் அவசியம் என்றும் அதனை அணுக்கமாய் உற்றுநோக்குதலும் அவசியம் என்கிறது.
மேலும்,பேங் நெகாராவும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வளைந்து கொடுக்கும் போக்கினையும் தெளிவுப்படுத்தியது.

#வீரத் தமிழன்


Pengarang :