NATIONAL

வாக்காளர்களின் நலனுக்காக சிலாங்கூரில் சட்டமன்ற தொகுதிகள் அதிகரிக்கப் பட வேண்டும்

ஷா ஆலம், ஜனவரி 4:

சிலாங்கூர் மாநில அரசாங்கம், மக்கள் தொகை அதிகரிப்பு காரணம் காட்டி சட்ட மன்ற தொகுதிகளை மேலும் அதிகரிக்குமாறு மலேசிய தேர்தல் ஆணையத்திடம் (எஸ்பிஆர்) பரிந்துரை செய்ய வேண்டும் என்று  முன்னாள் எஸ்பிஆரின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அப்துல் ரஷீத் அப்துல் ரஹ்மான் கூறினார். தற்போதைய தேவை அடிப்படையில் வாக்காளர்களின் நலன்களை பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று விவரித்தார். சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”   சிலாங்கூர் மாநிலத்தில் சட்டமன்றத் தொகுதிகள் கண்டிப்பாக  அதிகரிக்க வேண்டும். சில தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 40,000 இருந்து 50,000 வரை இருக்கிறது. ஒரு சட்ட மன்றத் தொகுதியில் இவ்வளவு வாக்காளர்கள் இருக்கக்கூடாது. ஆனாலும் சிலாங்கூர் மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாகவே உள்ளது,” என்று டாரூல் எசான் மையத்தில் நடைபெற்ற மறுசீரமைப்பு நடவடிக்கையினால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வுகளின் கண்ணோட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

 

 

 

 

 

 

பெர்சத்து கட்சியின் தேசிய உதவித் தலைவருமான அப்துல் ரஷீத், மாநில அரசாங்கம் எஸ்பிஆர் தொகுதி  மறுசீரமைப்பு செய்யும் போது இந்த பரிந்துரைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

”  சட்ட மன்ற தொகுதிகளை மேலும் அதிகரிக்க வேண்டும், சட்ட மன்ற உறுப்பினர்கள் அதிகரிக்கும் போது மக்கள் சேவைகள் மேலும் சிறந்த முறையில் இருக்கும். சிலாங்கூர் வளமான மாநிலம், அதிகரிக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கொடுக்க முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :