NATIONAL

14-வது பொதுத் தேர்தல் நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும்

எந்த நேரத்திலும் நடக்கும் என்று எதிர் பார்க்கப்படும் 14-வது பொதுத் தேர்தல் நேர்மையாகவும் மற்றும் நீதியான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறுகையில், 14-வது பொதுத் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்றால் சூழ்நிலை ‘சூடாக’ இருக்கும் என்றார்.

நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் இதற்கு முன்பு 14-வது பொதுத் தேர்தல் ‘எல்லா தேர்தலுக்கும் தந்தை’ என்று குறிப்பிட்டுள்ளதை நினைவு படுத்தினார்.

”  நஜீப் அவர்களே, 14-வது பொதுத் தேர்தல் நியாயமான மற்றும் நீதியான முறையிலும் நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள். நாட்டு மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர். இந்த மாற்றம் ஜனநாயக முறையில் சட்டத்திற்கு உட்பட்டு அமைதியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்,” என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மகளிர் மாநாட்டில் தனது தலைமையுரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#கு. குணசேகரன் குப்பன்

 


Pengarang :