SELANGOR

திறன்மிக்க தொழில்துறை வேலை வாய்ப்பினை ஏற்படுத்துகிறது மாநில அரசு

ஷா ஆலாம்,மார்ச் 26:

சுமார் வெ.5.59 பில்லியன் முதலீட்டின் மூ தொழிற்சாலை துறையில் 202 திட்டங்களை ஏற்படுத்தியிருப்பதோடு அதன் மூலம் திறன் மிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில்,நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிலாங்கூர் பெரும் பங்காற்றுவது பெருமிதமாக இருப்பதாக சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃப்புடின் இட்ரிஸ் ஷா கூறினார்.

சிலாங்கூர் மாநிலம் 2017 ஆம் ஆண்டில் வெ.5.59 பில்லியன் முதலீட்டால் 202 தொழிற்சாலை சார்ந்த வாய்ப்புகளை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியானது பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ம் மற்றும் தொழில் திறன் மிக்க வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதாக மாநிலத்தின் 13வது சட்டமன்றக்கூட்டத் தொடரை தொடக்கி வைத்து பேசுகையில் சுல்தான் இதனை குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி,சிலாங்கூர் மாநிலம் நிர்வாகத் திறனிலும் சரியான ஆட்சியை நிலையை கொண்டிருப்பதாகவும் கூறிய சுல்தான் மக்களின் நம்பிக்கையோடு உலகமய மக்களின் நம்பிக்கையையும் சிலாங்கூர் அரசு பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்,நல்ல நிர்வாகத் திறன் மற்றும் சிறந்த அரசு எனும் அடிப்படை தகுதியோடு சிலாங்கூர் மாநிலம் சிறந்த முதலீடு தலமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து,சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரம உயர்ந்திருப்பதோடு நாட்டின் பொருளாதார் மேம்பாட்டிற்கு 22.7 விழுகாடு பங்களிப்பை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2016 காட்டிலும் உயர்ந்துள்ளது..


Pengarang :