NATIONAL

மெர்டேக்கா சென்டர்: மலாய்காரர்களின் வாக்குகள் பாக்காத்தானுக்கே !!!

ஷா ஆலம், ஏப்ரல் 27:

எதிர் வரும் மே 9-இல் நடக்கவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில் மலாய்காரர்களின் ஆதரவு தேசிய முன்னணியில் இருந்து 8% பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு மாற இருக்கிறது என்று மெர்டேக்கா சென்டர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மெர்டேக்கா சென்டர் ஆய்வு இயக்குனர் இப்ராஹிம் சுப்ஃபியான் கூறுகையில், சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி மிக மோசமான நிலையில் உள்ளது என்று கூறினார். சிலாங்கூர் தேசிய முன்னணியின் செல்வாக்கு 17.5% சரிந்துள்ளது.

 

 

 

 

 

”  கடந்த 13-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு மலாய்காரர்களின் ஆதரவு 58.5% ஆக இருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது 41.3% ஆக ஆய்வு கூறுகிறது. ஜோகூர் மாநில தேசிய முன்னணி 20.9% ஆதரவை இழந்துள்ளது. இதற்கு முன்பு 81.8% மலாய்காரர்களின் ஆதரவு பெற்றது. ஆனால் தற்போது 60.9% மட்டுமே கொண்டுள்ளது. பேராக் மாநில தேசிய முன்னணியும் படு வீழ்ச்சியில் உள்ளது. 13-வது பொதுத் தேர்தலில் மலாய்காரர்களின் ஆதரவு 62.9% ஆக இருந்தது. ஆனால், இன்று 54.4% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது,” என்று பொதுத் தேர்தலுக்கான ஆய்வரங்கத்தில் மேற்கண்டவாறு இப்ராஹிம் சுப்ஃபியான் தெரிவித்தார்.

மலாய்காரர்களின் சுனாமி ஏற்படும் என்பது காலத்தின் கட்டாயம் என்று விவரித்தார்.


Pengarang :