SELANGOR

சேவையாற்றாத உள்ளூர் வேட்பாளரால் என்ன பயன்?

ஷா ஆலாம்,ஏப்30:

எந்தவொரு பங்களிப்பும் மக்களுக்கு செய்யாத உள்ளூர் வேட்பாளரால் என்ன பயன் என சுங்கை கண்டிஸ் வேட்பாளர் சுஹாய்மி ஷாஃபி கேள்வி எழுப்பினார்.

தேசிய முன்னணி வேட்பாளர் முன் வைத்திருக்கும் உள்ளூர் வேட்பாளர் பிரச்சாரத்தை கண்டு தாம் துளியும் அச்சம் கொள்ளவில்லை என்றும் கூறிய அவர் விவேகமான மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறினார்.

இத்தொகுதியில் சுமார் 10 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாய் சேவை ஆற்றிருக்கும் தனது சேவையை மக்கள் மதிப்பீடு செய்வார்கள் என்றும் கூறிய அவர் உள்ளூர் வேட்பாளர் எனும் தேசிய முன்னணியின் பிரச்சாரன் இங்கு எடுப்படாது என்றும் நினைவுறுத்தினார்.

உள்ளூர் வேட்பாளராக இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யாமல் தேர்தலில் உள்ளூர் வேட்பாளர் என முழங்குவது அர்த்தமற்றது என்றார்.

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் இத்தொகுதி புதிய தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் 2009 ஆம் ஆண்டு முதல் இங்குள்ள மக்களின் ஆதரவும் வாக்குகளும் நமக்கு பெரும் சாதகமாய் அமைந்திருப்பதாகவும் நினைவுக்கூர்ந்தார்.

சுமார் பத்தாண்டுகள் மக்கள் பிரதிநிதியாய் மக்களுக்கு தன் கடமையை முறையாக செய்திருப்பதால் உள்ளூர் வேட்பாளர் பிரச்சாரம் தனது வெற்றிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என சுஹாய்மி ஷஃபி நம்பிக்கை கொண்டுள்ளார்.

இதற்கிடையில்,28 ஆண்டுகளாய் தேசிய முன்னணி செய்யாத ஜோகான் செத்திய மசூதியை கடந்த 2012 பாக்காத்தான் கட்டி முடித்ததாக கூறிய அவர் அதுபோலவே ஸ்ரீமுடா புத்ரா ஹாட்,கோத்தா கொமுனிங் மற்றும் ஜாலான் கெபுன்,புக்கிட் நாகா ஆகிய பகுதி மசூதிகளையும் பாக்காத்தான் அரசு கட்டிக் கொடுத்ததாகவும் கூறினார்.

மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் இத்தொகுதியில் களமிறங்கியிருப்பதாக கூறிய சுஹாய்மி விவேகமான மக்கள் விவேகமாய் முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.


Pengarang :