NATIONAL

தோம்மி தோமஸ் தலைமை வழக்கறிஞராக மாமன்னர் அங்கீகாரம் வழங்கினார் !!

கோலா லம்பூர், ஜூன் 5:

மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V, புதிய தலைமை வழக்கறிஞர் பொறுப்புக்கு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி முன்மொழிந்த தோம்மி தோமஸ்ஸை ஏற்றுக் கொண்டதாக  அரச முத்திரை காப்பாளர் டத்தோ வான் அமாட் டாஹ்லான் அப்துல் ஹாஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாமன்னர், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில்  145(1) அதிகாரத்தின் கீழ் செயல்படுவதை உறுதி செய்தார். இது பிரதமரின் (துன் டாக்டர் மகாதீர் முகமட்) ஆலோசனையை ஏற்று பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

” மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V, நாட்டின் தலைமை வழக்கறிஞர் தேர்வு இனம் அல்லது மதம் ஆகிய கூறுகளை உள்ளடக்கியது அல்ல, மாறாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து மலேசியர்களையும் நீதியான முறையில் நடத்தப்பட வேண்டும்,” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 4-இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நியமனம் மலாய்காரர் மற்றும் பூமிபுத்ரா சிறப்பு சலுகைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராது என்றும் இஸ்லாம் சமயம் கூட்டரசின் அதிகாரப்பூர்வ சமயம் என்றும் உறுதி அளிக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : பெர்னாமா


Pengarang :