NATIONAL

சுகாதார அமைச்சு: தேசிய பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தை ஆராய்ந்து வருகிறது

புத்ரா ஜெயா, ஜூன் 6:

இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் நிர்வாகத்தை மேலும் சீராக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். “பெடுலி சேஹாட் நேஷனல்” திட்டம் மற்றும் ஏழைகளுக்கான தாகாப்ஃபூல் காப்புறுதி போன்றவை அடங்கும் என்று விவரித்தார்.

இதனிடையே , பொய் செய்தி சட்டம், ஜிஎஸ்டி சட்ட மசோதா நீக்கம் மற்றும் அரசாங்க ஆலோசக மன்றத்தின் எதிர்காலம் ஆகிய அம்சங்கள் விவாதிக்கப் பட்டது என்றுகூறினார். பேங்க் நெகாராவின் கவர்னர் முகமட் இப்ராஹிம்மின் பதவி விலகல் குறித்தும் பேசப்பட்டதாக மகாதீர் தெரிவித்தார்.

அமைச்சரவைகூட்டத்தில் பேசப்பட்ட மற்ற அம்சங்கள்:

*தலைமை வழக்கறிஞர் மற்றும் வெளியுறவு அமைச்சும் எம்எச்17 குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்

* பிரதமர் இந்த வாரம் முழு அமைச்சரவையை அறிவிப்பார்

* இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாக்கிம்) மறுசீரமைப்பு செய்யப்படும்

* ஜூன் 8 இல் இருந்து 22-வரை பெருநாள் விலைக் கட்டுபாடு அமல்படுத்தப்படும்

* அரசாங்கம் மலேசிய மற்றும் சிங்கப்பூர் வர்த்தக சந்தையை மறுஆய்வு செய்யும்

* முன்னாள் தேசிய தணிக்கை குழு தலைவர் டான்ஸ்ரீ அம்ரீன் புவாங் நிர்வாக மற்றும் நிதி முறைகேடு விசாரணை குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

* பாலர்பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை உள்ள பாடத் திட்டத்தை ஆராய அரசாங்கம் சார்பற்ற நிபுணர் குழு

* தென் சீனக் கடல் மற்றும் மலாக்கா நீரிணையில் போர்க்கப்பல்கள் வரக் கூடாது என்ற முடிவு

* சிறுதொழில் முனைவர்களுக்கு வங்கி கடனுதவி மறுஆய்வு


Pengarang :