NATIONAL

நான்கு புதிய குத்தகை நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய அரசு முடிவு!!

புத்தராஜெயா,ஜூலை12:

நாட்டில் சுயட்சை உற்பத்தி ஆற்றல் சார்ந்த புதிய குத்தகை நிறுவனம் நான்கை ரத்து செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக எரிப்பொருள், தொழிநுட்பம்,அறிவியல்,பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் யோ பீ யீன் தெரிவித்தார்.முன்னால் அரசாங்கம் ஒப்புதல் கொடுக்கப்பட்ட அந்நிறுவனங்களை ரத்து செய்ய அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குத்தகை மற்றும் அவர்களின் ஆற்றல்,நிதிநிலை உட்பட பல்வேறு விடயங்களை நன்கு ஆராய்ந்த பின்னர் இம்முடிவு எடுக்கப்படும் என்றும் கூறிய அவர் அந்நிறுவனங்களில் ஒன்று பொது நிறுவனமாய் வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும்,எட்டு குத்தகை நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்க பிரதமர் துன் மகாதீர் ஒப்புதல் கொடுத்திருக்கும் நிலையில் அவை ஆபாயம் குறைவான திட்டங்களை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்படும் என்றார்.ஒவ்வொரு குத்தகை நிறுவனங்களின் செயல்பாடுகளும் அதன் சேவை மற்றும் நிறைவான நடவடிக்கைகளுக்கு பின்னரே ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் சுமார் 30 குத்தகை நிறுவனங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அதிகரிப்பது குறித்த நடவடிக்கையும் ஆய்வுகளும் தனித்துவமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும்,இத்துறையில்,ஆரோக்கியமான போட்டியையும் சவாலையும் உருவாக்குவது குறித்தும் அரசு அதன் செயல்பாட்டினை மேற்கொண்டுள்ளது என்றார்.
இத்துறை சார்ந்து நாடு சிறந்த இலக்கை எட்டுவதற்கும் நிறைவான சேவையையும் செயல்பாட்டையும் முன்னெடுப்பதற்கு அரசின் ஒவ்வொரு நகர்வும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :