SELANGORUncategorized @ta

ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச டியூசனுக்கு 16,000 மாணவர்கள் பதிவு!!

ஷா ஆலம்,ஜூலை22:

ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் மாநில அரசு மேற்கொண்டு வரும் இலவச டியூசனுக்கு சுமார் 16,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

படிவம் 4 மற்றும் படிவம் 5 மாணவர்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் இந்த இலவச டியூசனுக்கு இவ்வாண்டு 25,000 மாணவர்களை மாநில அரசு இலக்காக கொண்டுள்ளது எனவும் யாயாசான் சிலாங்கூரின் தற்காலிக தலைவர் ஜாவுரா ஜக்ரி தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக மாநில அரசு வெ.5 மில்லியனை ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காண்பித்த அவர் 2018 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னரே 25,000 மாணவர் இலக்கை எட்டிவிட்டதாகவும் கூறினார்.

இணையம் வழி இலவச டியூசன் மாணவர்கள் மத்தியில் நன் வரவேற்பை பெற்றிருப்பதோடு அஃது பெற்றோரின் சுமையையும் குறைத்துள்ளது என்றார்.சிறந்த மாணவர்களை உருவாக்க மாநில அரசின் இத்திட்டம் விவேகம் மிக்கதாய் அமைந்துள்ளதாகவும் கூறினார்.

அதேவேளையில்,சிலாங்கூர் மாநில மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை எட்டுவதற்கு யாயாசான் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா,மாநில இஸ்லாமிய இலாகா உட்பட பல்வேறு தரப்புடன் கைகோர்த்து செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்,மாணவர்களின் நலனுக்காக ஆற்றல் மற்றும் விவேகம் மிக்க நடவடிக்கைகளையும் தொடர்ந்து மெற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :