NATIONAL

அம்னோவும் பாஸ் கட்சியும் அண்ணன் தம்பிகள் – துன் மகாதீர்!!

அம்பாங்,ஜூலை22:

சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடாதது ஆச்சரியமான ஒன்றல்ல.அம்னோவுடன் அக்கட்சிக்கு அணுக்கமான உறவு இருபதால் அஃது இயல்பானதே என்று பிரதமர் துன் மகாதீர் வர்ணித்தார்.

அவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு அண்ணன் தம்பியை போன்றது எனவும் அவர் துணைப்பிரதமர் வீட்டு இல்லத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறினார்.

கடந்த பொது தேர்தலில் பாஸ் சுங்கை கண்டிஸ் தொகுதியில் அதன் வேட்பாளரை களமிறக்கிய நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்விரு கட்சிகள் மத்தியில் இருக்கும் உறவு குறித்து பொது தேர்தலுக்கு முன்னர் பல்வேறு கருத்தியல் நிலவிய வேளையில் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அவை பெரும் தோல்வியை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ் அதன் வேட்பாளரை களமிறக்காத நிலையில் ஹராப்பான் கூட்டணி,தேசிய முன்னணி வேட்பாளரிடு சுயட்சை வேட்பாளரும் போட்டியை எதிர்கொள்கிறார்கள்.சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறுகிறது.


Pengarang :