SELANGOR

சுங்கை கண்டிஸ் வேட்பாளர் தேர்வு ஏகமனதானது!!

ஷா ஆலம்,ஜூலை22:

சுங்கை கண்டிஸ் வேட்பாளர் தேர்வில் தனக்கு உடன்பாடு இல்லை எனும் தகவல் உண்மைக்கு புறம்பானது என
கெஅடிலான் கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

அனைத்து தரப்பின் ஒப்புதலோடு ஏகமனதாய் எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் கூறிய அவர் வேட்பாளர் தேர்வில் அனைத்து தரப்பும் நிறைவு கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

கட்சியும் ஹராப்பான் கூட்டணியும் அனைத்து விவகாரத்திலும் தன்மையிலும் புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

தேசிய முன்னணியை காட்டிலும் ஹராப்பான் கூட்டணி வலுவாகவும் திறனாகவும் இருப்பதாக கூறிய அவர் ஹராப்பான் கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்கவே அம்னோ இல்லாத
ஒன்றை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும்,ஹராப்பான் கூட்டணி அதன் ஒவ்வொரு செயல்பாடிலும் நடவடிக்கையிலும் தெளிவாக கலந்துபேசி நன்முறையிலான தீர்வினை முன்னெடுப்பதாக கூறினார்.இந்த அணுகுமுறை கட்சியிலும் ஹராப்பான் கூட்டணியிலும் தனித்துவ நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு வலுவான கூட்டணியாய் இயங்கவும் பெரும் பங்காற்றுகிறது என்றார்.

சுங்கை கண்டிஸ் வேட்பாளராக முகமட் ஜவாவி அமாட் முக்ஃனி தேர்வு செய்யப்பட்டதில் தனக்கு உடன்பாடு இல்லையென பரப்பப்பட்ட தகவல் குறித்து அஸ்மின் அலி இவ்வாறு தெளிவுப்படுத்தினார்.

வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் டுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஜவாவி முக்ஃனியும் தேசிய முன்னணி சார்பில் டத்தோ லொக்மான் நோர் அடாமும் சுயட்சை வேட்பாளராக மூர்த்தி கிருஸ்ணசாமியும் களம் காண்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :