SELANGOR

தண்ணீர் கட்டணத்தில் மாற்றம் இல்லை – மாநில அரசின் அக்கறை பாராட்டுதல்குரியது!!

ஷா ஆலம்,ஆகஸ்ட் 06:

தண்ணீர் கட்டணத்தில் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து இலவச நீருக்கும் வழி செய்துள்ள சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நலன் திட்டம் மிகவும் போற்றுதல்குரியது என கருத்துரைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதோடு பொருளாதார ரீதியிலும் பெரும் உதவியாக உள்ளது.தண்ணீர் கட்டணம் உயராது என மந்திரி பெசார் வெளியிட்ட அறிக்கை சிலாங்கூர் மக்களும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

மந்திரி பெசாரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்படுகிறது.

இதில் தன் முகநூலில் அமிர்யொன் யோன் என்பவர் மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளவர் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில்,தண்ணீர் கட்டணத்தை ஏன் உயர்த்தவில்லை? அம்னோவினர்களுக்கு அரசியல் செய்ய காரணம் இல்லாமல் போய்விட்டதே என ஒருவர் கிண்டலடித்திருந்தார்.

ஸ்பிலாஸ் நிறுவனத்தை மாநில அரசு கையகப்படுத்திக் கொண்டதன் காரணமாய் கொண்டிருந்த கடனை தவணை முறையில் செலுத்துவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் விவகாரம் வருங்காலங்களில் விவேகமாய் கையாளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :