NATIONAL

பிரதமர்: ஜிஎஸ்டி வரிப்பணம் காணாமல் போகவில்லை என்ற ஆதாரத்தை காட்ட வேண்டும்

செர்டாங், ஆகஸ்ட் 12: நிதியமைச்சர் லிம் குவான் எங் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திரும்பி செலுத்தும் பணம் ரிம 18 பில்லியன் காணாமல் போனது என்ற குற்றச்சாட்டை பொய் என்று ஆதாரத்துடன் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தினார். நஜீப் வெறுமனே மறுத்து அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ள நடவடிக்கை சரியில்லை என்று கூறினார். மேலும் ஜிஎஸ்டி வரிப்பணம் திரும்பி செலுத்தும் நடைமுறை சரியான முறையில் செயல்படுத்தப் பட்டதை நிருபிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

” வெறுமனே மறுத்து அறிக்கை மட்டும் வெளியிடக்கூடாது. நஜீப் ஒன்று கூறுகிறார், லிம் குவான் எங் வேறொன்று வெளியிட்டுள்ளார். ஜிஎஸ்டி வரிப்பணம் திரும்பி செலுத்தும் நடைமுறை சரியான முறையில் நடந்தது என்று ஆதாரத்துடன் காட்ட வேண்டும்,” என்று செய்தியாளர்களிடம் துன் மகாதீர் பேசினார்.

 


Pengarang :