NATIONAL

ஜி.எஸ்.டி இல்லாவிட்டாலும் பி40 வர்க்கத்திற்கு அரசு தொடர்ந்து உதவிடும் !!

ஷா ஆலாம்,ஆக13:

ஜி.எஸ்.டி வரியை முற்றாக அகற்றி விட்ட நிலையில் பி40 வர்க்கத்தின் மீதான நலனில் தொடர்ந்து ஹராப்பான் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று கூறிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் பி40 வர்க்கத்திற்கு அரசின் உதவிகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

ஜி.எஸ்.டி இல்லாமல் போனால் மக்களுக்கான நலத்திட்டங்களை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள முடியாது என்று தொடர்ந்து வாதிட்டு வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்யின் கூற்றுக்கு லிம் குவான் இவ்வாறு பதிலடிக் கொடுத்தார்.

ஜி.எஸ்.டி இல்லாவிட்டால் நாடு திவாலாகி விடும் என இதற்கு முந்தைய அரசு கூறியதையும் சுட்டிக்காண்பித்த லிம் குவான் எங் ஹராப்பான் அரசாங்கம் ஜி.எஸ்.டி வரியை முற்றாக அகற்றியும் மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்வதோடு நாடு திவாலாகவும் இல்லை என்றும் கூறினார்.

பிரிம் தொகை தற்போது வாழ்வாதார உதவி நிதி ஜி.எஸ்.டி இல்லாவிட்டாலும் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

எல்லா நிலையிலும் ஒப்பிடுகையில் முந்தைய தேசிய முன்னணி அரசை காட்டிலும் ஹராப்பான் அரசாங்கம் மிகவும் விவேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பெட்ரோல் டிசல் விலை உட்பட பல்வேறு விவகாரங்களில் திறன் மிக்க செயல்பாட்டினை மேற்கொள்வதோடு தொடர்ந்து மக்கள் நலனில் தனித்துவ கவனமும் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மக்களுக்கு தொடர்ந்து சுமையையும் பெரும் அழுத்தத்தையும் தேசிய முன்னணி கொடுத்ததன் விளைவால் தான் வெறுப்படைந்த மக்கள் அம்னோ தேசிய முன்னணியின் 60 ஆண்டுகால ஆட்சிக்கு விடைகொடுத்ததாகவும் கூறினார்..


Pengarang :