NATIONAL

கட்டுமானப் பொருட்களுக்கு எஸ்.எஸ்.டி வரி இல்லை !!

புத்ரா ஜெயா,ஆக13:

கட்டுமான நிர்மானிப்பு பொருட்களுக்கு எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை சேவை வரி விதிக்கப்படாது என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

இதற்கு முன்னர் ஜி.எஸ்.டி வரி நடப்பில் இருந்த போது கட்டுமான நிர்மாணிப்பு பொருட்களின் மீது அஃது விதிக்கப்பட்டதை நினைவுக்கூர்ந்த அவர் அதனால் பொருட்களின் விலை உயர்ந்தது என்றார்.

அதன் விளைவால் வீடுகளின் விலையும் உயர்ந்ததாக அவர் சுட்டிக்காண்பித்தார்.ஜிஎஸ்.டிக்கு மாற்றாக எஸ்.எஸ்.டி விதிக்கப்படுவதால் பொருட்களின் விலையோடு வீடுகளின் விலையும் குறையும் என நம்பிக்கை தெரிவித்த அவர் இது மக்களின் சுமையையும் குறைக்கும் என்றார்.

கட்டுமானப் பொருட்களுக்கு வரி விலக்கு அளித்திருப்பதால் இதன் மூலம் மக்கள் உட்பட அனைத்து தரப்பும் நன்மை அடையும் என்றும் மேலும் அவர் கூறினார்.


Pengarang :