SELANGOR

அன்வார்: பாக்காத்தான் பூமிபுத்ராக்களின் சிறப்புச் சலுகைகளை எதுவும் செய்யவில்லை; மாறாக நிலைநிறுத்தப் பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 7:

மலாய்காரர்களின் சிறப்பு உரிமை மற்றும் இஸ்லாம் தொடர்ந்து நிலைநாட்டப்படும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமை ஆலோசகரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார். கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த முடிவில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியினர் மலாய்-பூமிபுத்ரா மற்றும் இஸ்லாம் சம்பந்தமாக எதையும் கைவைக்கவில்லை என்பதை தெளிவாக தெரிகிறது என்றார். மாறாக மலாய்காரர்களின் சிறப்புரிமை தொடர்ந்து பேணிக் காக்கப் படுகிறது என்று அன்வார்  கூறினார்.

 

 

 

 

 

 

” நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மலாய் மொழி தேசிய மொழியாகவும், இஸ்லாம் கூட்டரசின் அதிகாரப்பூர்வ சமயம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை யாராலும் நீக்கம் செய்ய முடியாது. பூமிபுத்ராக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல் சீனர்கள், இந்தியர்கள், ஈபான் மற்றும் கடஸான் இனத்தவர்களின் நலன்களும் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும். மலாய் அரசர்களின் இறையாண்மை நிலைநிறுத்தப் பட வேண்டும் ஏனெனில் இது அனைத்தும் மலேசிய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது,” என்று ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர் ஹாலிமி அபு பாக்காரை ஆதரித்து பிஜெயு 1A/39 கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு அன்வார் பேசினார்.

 

 

 

 

 


Pengarang :