SELANGOR

ஸமார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை தொடரும் – 30 மில்லியன் இதுக்கீடு

ஷா ஆலம்:

மாநிலத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பித்த மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி ஸ்மார்ட் பஸ் சேவை தொடரும் என தெரிவித்தார்.

மக்களின் நலனுக்காகவும் பொது போக்குவரத்தின் சிறந்த சேவையாகவும் மக்களின் வாழ்வாதார சிறக்க பெரும் பங்காற்றும் ஸ்மார்ட் பேருந்து சேவைக்கு மாநில அரசாங்கம் வெ.30 மில்லியனை ஒதுக்குவதாக அறிவித்தார்.

மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் இத்திட்டம் சிலாங்கூரில் சிறந்த போக்குவரத்து சேவையாக விளங்குவதாகவும் ஒதுக்கப்பட்ட நிதி இத்திட்டம் மேலும் மேம்படுத்துவதற்கு உகர்ந்தது எனவும் தெரிவித்தார்.

இவ்வருட 31ஆம் தேதி ஆகஸ்டு வரை சுமார் 25 மில்லியன் பயணிகள் இச்சேவையை பயன்படுத்தியிருப்பதாகவும் மக்களின் நலனுக்காகவே அதன் போக்குவரத்து நேரத்தை மறுசீரமைப்பு செய்திருப்பதாகவும் கூறிய மந்திரி பெசார் இப்பேருந்து சேவை குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு பெரும் பங்களிப்பினை செய்வதாக கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் இப்பேருந்து சேவை பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விளங்குவதாகவும் இன்றைய சூழலில் இச்சேவை காலத்திற்கு உகர்ந்தது எனவும் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை சிலாங்கூர் மாநில மக்களின் வாழ்வாதரத்திற்கும் அதேவேளையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பு செய்வதாகவும் கூறிய அமிரூடின் ஷாரி சிலாங்கூரின் 11ஊராட்சித்துறையில் 38 வழி சேவையில் சுமார் 123 பேருந்துகள் சேவையில் இருப்பதாகவும் நினைவுக்கூர்ந்தார்.

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை இனி வரும் காலத்தில் இன்னும் பல மேம்படுத்தப்பட்ட நிலையில் அதன் சேவையினை தொடங்கும் எனவும் தெரிவித்தார்.


Pengarang :