SELANGOR

நீர்ப்பாசனம் மற்றும் வடிகாலமைப்பு துறைக்கு வெ.89.2 மில்லியன் ஒதுக்கப்பட்டது

ஷா ஆலம், நவம்பர் 23:

கால்வாய் மற்றும் வெள்ளப் பிரச்னைகளுக்கு நன் தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெ.பி.எஸ் எனப்படும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகாலமைப்பு துறைக்கு மாநில அரசாங்கம் வெ.89.2மில்லியனை ஒதுக்குவதாக மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அந்நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒதுக்கப்பட்ட நிதிதில் வெ.47.56 மில்லியன் வெள்ளத் தடுப்பு அணை மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் எனவும் மந்திரி பெசார் கூறினார்.

மேலும்,மீதமுள்ள வெ.22.59 மில்லியன் இதர மேம்பாடு திட்டங்களை தரம் உயர்த்த பயன்படுத்தப்படும் என்றும் அதில் கிள்ளான் மாவட்டத்தின் சுங்கை கண்டிஸ் பகுதியும் அடங்கும் என்றார்.

ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஜெ.பி.எஸ். மேலும் சிறப்பாகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்த அமிரூடின் ஷாரி மழைக்காலங்களில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதற்கு முன்னர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பெரும் பகுதி தற்போது அப்பிரச்னையிலிருந்து விடுப்பட்டு விட்டதாகவும் எஞ்சியுள்ள சில பகுதிகளும் அதிலிருந்து விடுப்பட ஒதுக்கப்பட்ட நிதி பெரும் பங்காற்றும் எனவும் பட்ஜெட் தாக்கல் செய்த மந்திரி பெசார் தெரிவித்தார்.


Pengarang :