NATIONAL

கேஎப்சி & மெக்டோனல்ட் நிறுவனங்கள் விலைகளை உயர்த்தி உள்ளதா?

புத்ரா ஜெயா, டிசம்பர் 27:

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, விரைவு உணவுப் பொருள் விற்பனை செய்யும் கேஎப்சியும் மற்றும்  மெக்டோனல்ட் பொருள் விலைகளை உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தும்.

அமைச்சின் அமலாக்கப் பிரிவுத் துணை இயக்குனர் இஸ்கண்டார் ஹாலிம் சுலைமான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கேஎப்சி விற்பனை செய்யும் இடங்களுக்குச் சென்று சோதனை செய்வதாகக் கூறினார். அவர்கள் விரைவில் மெக்டோனல்ட்’ஸ் மையங்களுக்கும் செல்வர்.

கேஎப்சி போலவே மெக்டோனல்ட்ஸும் விலைகளை உயர்த்தி இருப்பதாக அச்செய்தி குறிப்பிட்டது.

நேற்று, கேஎப்சி உரிமையாளர் கியூஎஸ்ஆர் பிரான்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம்  விலைகளில் “சிறிதளவு திருத்தங்கள் செய்திருப்பதாக” ஓர் அறிக்கையில் கூறி இருந்தது.

அதன் பொருள் விலைகள் பெருமளவு உயர்ந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியதை அடுத்து அந்நிறுவனம் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இன்று அதே நிறுவனம் தன்னுடைய அறிக்கை திரித்துக் கூறப்பட்டுள்ளதாக கூறியது.


Pengarang :