SELANGOR

தலைமைத்துவத்தில் நேர்மை தேவை !

கிள்ளான், ஜன.24:

ஊழலை புறந்தள்ளி நேர்மையை அமல்படுத்தியதே சென்ட்ரல் ஸ்பெக்ட்ரம் நிறுவனத்தின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கையூட்டு நோயை தங்களது பணியாளர்களை தாம் நெருங்கக் கூடாது என்று அடிக்கடி வலியுறுத்தி வருவதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மஹ்முட் அபாஸ் கூறினார்.

நமது சமுதாயத்தினர் அதிகளவில் கையூட்டு பெறுகின்றனர். ஒரு மேம்பாட்டு நிறுவனமான இதில் பணியாற்றும் பணியாளர்களை அந்தக் கலாச்சாரம் கவரக்கூடும் என்பதால் வாரந்தோறும் நடைபெறும் சந்திப்புக் கூட்டங்களில் தாம் இதை வலியுறுத்தி வருவதாக அவர் சொன்னார்.

இந்நிறுவனம் கையூட்டு பெறுவதில்லை. எனவே வாடிக்கையாளர் அல்லது மேம்பாட்டு நிறுவனங்களிடம் விதிக்கும் விலை போட்டியாற்றல்மிக்கதாக இருக்கிறது என்றார் அவர்.

சிஎஸ்எஸ்பி நிறுவன பணியாளர்கள் ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் சிலாங்கூர் கினியிடம் டத்தோ மஹ்முட் அபாஸ் தெரிவித்தார்.


Pengarang :