NATIONAL

உள்நாட்டு, தென்கிழக்காசிய சந்தைகளில் 10 % விற்பனையை அதிகரிக்க ‘அமால்’ இலக்கு

சிப்பாங், பிப்.12:

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘அமால்’ எனும் உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரை சேவைகள் வழி அடுத்த ஈராண்டுகளில் உள்நாட்டு மற்றும் தென்கிழக்காசிய சந்தையில் 10 விழுக்காடு விற்பனையை அதிகரிக்க மலேசிய விமான நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.

“கோலாலம்பூரில் இருந்து ஜெட்டா மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்கான பயண ஏற்பாடுகள் வழி மலேசிய விமான நிறுவனம் மீண்டும் அதன் பொற்காலத்திற்கு திரும்ப இயலும்” என்று அமால் தலைமை நிர்வாக மதிகாரி ஹஸ்மான் ஹில்மி சலாஹுடின் கூறினார்.

“உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரை பயணங்களுக்கான விமான சேவையின் தரம் திருப்திகரமாக இல்லை, பயண நேரத்தில் கால தாமதம், சுவையற்ற உணவு போன்ற பல குறைகூறல்களைக் கருத்தில் கொண்டு, சிறந்த, தரம் வாய்ந்த பயணச் சேவையை வழங்குவதே ‘மால்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்” என்று அவர் சொன்னார்

கடந்த 2018 முதல் யாத்திரை பயணங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பயணிகள் புனித தலத்தை அடைந்த பின்னர் யாத்திரை தொடங்காமல், யாத்திரை என்பது விமானப் பயணத்தின் போதே உணரப்பட வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


Pengarang :