Datuk Nor Shamsiah Mohd Yunus
NATIONALRENCANA PILIHAN

வீடுகள் ஏராளம் ஆனால் வாங்குவதற்கு வசதி இல்லை!

கோலாலம்பூர், ஆக.29-

நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சி காண்பதற்கும் மக்களின் வாழ்க்கை வளமாக அமைவதற்கும் பொருத்தமான கட்டுப்படி வீடுகள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும், உலகெங்கிலும் மேம்பாடடைந்த நாடுகள் உட்பட, இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்குப் பல மாநகரங்கள் போராடி வருகின்றன.

பல்வேறு வருமான பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து மக்களும் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கடப்பாட்டை நிறைவேற்றுவது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என்று பேங்க் நெகாரா கவர்னர் டத்தோ நோர் ஷம்சியா முகமது யூனுஸ் கூறினார்.

வீடுகளின் விலைகளைக் குறைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.
வீடுகளின் விலையை நிர்ணயிப்பத்தில் நிலம், கட்டுமானம் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகிய மூன்று அம்சங்கள் முக்கிய பங்களிப்பதாக அவர் சொன்னார்.


Pengarang :