Amirudin Shari bersama kontinjen Majlis Bandaraya Shah Alam yang menjadi johan perbarisan kategori Pihak Berkuasa Tempatan pada Majlis Sambutan Hari Kebangsaan Peringkat Negeri Selangor di Dataran Kemerdekaan Shah Alam pada 30 Ogos 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: நாட்டின் எதிர் காலத்திற்கு, இளையோரிடம் நெருங்குங்கள்; கருத்துக்களை கேளுங்கள் !!!

ஷா ஆலம், ஆகஸ்ட் 31:

சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த இளையோரின் உணர்வுகளையும் மற்றும் எதிர்பார்ப்புகளையும் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி நினைவு படுத்தினார். சிலாங்கூர் மாநிலம் மற்றும் மலேசியத் திருநாட்டின் எதிர்காலம் இளையோரின் கையில் உள்ளது என்ற நிதர்சனமான உண்மையை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

” அனைவருக்கும் வீடமைப்பு திட்டம், அளவான வருமானம், நெகிழ்வான வேலை நேரம் மற்றும் தரமான வாழ்க்கை தரம் போன்ற அம்சங்கள் இளையோரின் உணர்வுகளில் ஒருங்கிணைந்து உள்ளது. நாம் அவர்களின் பிரச்சினைகளை தீர்வு காண தவறினால், மலேசிய நாட்டின் நல்ல எதிர் காலத்தை உருவாக்க தவறி விட்டோம் என்று கருதப்படும்,” என்று 62-வது சிலாங்கூர் மாநில அளவிலான சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது இவ்வாறு அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.


Pengarang :