NATIONALRENCANA PILIHAN

வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் நிவாரண அமைப்பு

கோலாலம்பூர், அக்.1:

பருவ நிலை மாற்ற்ம் இவ்வாண்டு நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளப் பேரிடர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க சம்பந்தப்பட்ட தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் அச்சூழலை எதிர்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட பேரிடர் நிர்வாக அமைப்புகள் தயாராக இருப்பதை தமது தரப்பு உறுதி செய்யும் என்று தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் (நாட்மா) அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ஜக்காரியா ஷாபான் கூறினார்.

“சமூக அடிப்படையிலான பேரிடர் நிர்வாகத் திட்டத்தைச் சேர்ந்ட தன்னார்வ படையினருக்கு தொடர் பயிற்சிகளை நாட்மா நடதேத்தி வருகிறது. தேசிய தயார் நிலை திட்டத்தின் கீழ் மக்கள் மத்தியில் பேரிடர் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இம்மாதம் தொடங்கி வருடாந்திர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும்” என்றார் அவர்.

வெள்ளத்தால் பாதிப்புறும் 1.6 மில்லியன் மக்கள் தங்கும் வசதியைக் கொண்ட 5,482 தற்காலிக தங்குமிட மையங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :