Amirudin Shari berucap sempena Konvensyen Transformasi Pengurusan Hal Ehwal JAIS di Dewan Muzakarah, Masjid Negeri pada 1 Oktober 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

ஆறுகளின் தூய்மைக்கேட்டு பிரச்னையை எதிர்கொள்ள சிறப்பு திட்டம் – மந்திரி பெசார்

ஷா ஆலம் அக்.1-

மாநிலத்தின் முக்கிய ஆறுகளை கண்காணிக்கும் நடவடிக்கையை எளிமைப்படுத்த சிலாங்கூர் விவேக சேவை பிரிவுடன் ( எஸ்எஸ்டியு) இணைந்து மாநில அரசு சிறப்பு திட்டங்களை வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் ஏற்படும் தூயமைக்கேட்டு பிரச்னையால் நிலையங்களின் பணி அடிக்கடி தடைபடுவதைத் தவிர்ப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

தூய்மைக்கேட்டிற்கு இலக்காகும் சாத்தியம் உள்ள முக்கிய ஆறுகளை கண்காணிக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் மீண்டும் தூய்மைக்கேடு நிகழாதிருக்க மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இடு என்றார் அவர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து மீண்டும் இது நிகழாதிருப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கையிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :