NATIONALRENCANA PILIHAN

வேதமூர்த்தி அமைச்சராக நீடிப்பார்! – பிரதமர் துன் மகாதீர்

புத்ராஜெயா, அக்.3-

தீயணைப்பு படை வீரர் முகமது அடிப் மரணவிசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்துள்ள போதிலும் அவர் பிரதமர் துறையின் அமைச்சராக நீடிப்பார் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

“இதில் பிரச்னை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆதலால் அவர்  (வேதமூர்த்தி ) அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பெற்றிருப்பார்” என்று உள்துறை அமைச்சில் பாதுகாப்பு கொள்கை மற்றும் பொது அமைதி மற்றும் பாதுகாப்பு கொள்கையைத் தொடக்கிய வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் மகாதீர் தெரிவித்தார்.

வேதமூர்த்தியை அமைச்சர்வையில் நீக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் பல தரப்பினர் நெருக்குதல் வழங்கிய போது அடிப் மரணவிசாரணைக்கு பின்னர் அது குறித்து முடிவெடுக்க விருப்பதாக மகாதீர் கூறியிருந்தார்.

கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரத்தின் போது பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது அடிப் மரண்மடைந்தார். இருவருக்கு மேற்பட்ட நபர்கள் தாக்கிய்தால்தான் அவ்ர் மரணமடைந்தார் என்று மரணவிசாரணை நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது.


Pengarang :