NATIONALRENCANA PILIHANSELANGOR

வாழ்க்கைச் செலவினம்: சிலாங்கூர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், அக்.29-

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் தனிநபர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதமொன்றுக்கு 1,200 வெள்ளி என்பது வாழ்க்கைச் செலவினத்திற்கு போதுமானதல்ல என்று பொருளாதார நிபுணர் ஒருவர் கூறினார்.
இந்த குறைந்தபட்சம் ஊதியத்தைக் கொண்டு ஒரு நபர் இப்பகுதியில் வாழ்ந்திட இயலாது. எனவே, சம்பந்தப்பட்டவர் மற்றொரு வேலை செய்ய வேண்டும் இல்லை உபரி வர்த்தகம் ஏதும் புரிய வேண்டும் என்று சன்வே வர்த்தக பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் டாக்டர் இயா கின் லெங் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு மலேசிய புள்ளிவிவர இலாகாவின் ஆய்வின்படி, கோலாலம்பூரில் ஒரு ஏழை குடும்பத்தின் (பி40) மாதாந்திர வருமானம் சராசரி 5,344 வெள்ளியாகும் என்றார் அவர்.
நாட்டில் உள்ள பி40 பிரிவைச் சேர்ந்த 2.8 மில்லியன் பேரில் 2 விழுக்காட்டினர் அல்லது 55,600 பேர் கோலாலம்பூரில் வசிக்கின்றனர். எனவே, தலைநகரில் வாழ்பவர்களின் வறுமை விகிதாச்சாரத்தை நிர்ணயிப்பது சிரமமான காரியமாகும் என்றார்.

2018ஆம் ஆண்டு பேங்க் நெகாராவின் ஆய்வில், கோலாலம்பூரில் வசிக்கும் ஒரு தனிநபருக்கு மாதம் 2,700 வெள்ளியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு மாதம் 4,500 வெள்ளி தேவை என்றும் 2 குழந்தைகள் கொண்ட தம்பதியருக்கு மாதம் 6,500 வெள்ளி தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது என்றார் அவர்.

பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தலைநகரில் வசித்தால், அதன் சராசரி வருமானம் மாதமொன்றுக்கு 5,344 வெள்ளி என்றிருந்தால், அக்குடும்பம் சவால்கள் நிறைந்த வாழ்க்கை சூழலையே கொண்டிருக்கும் என்றும் வாகனம் உட்பட இதர பொருட்களை வாங்குவதிலும் சிரமத்தை எதிர்நோக்கும் என்றும் தியா குறிப்பிட்டார்.


Pengarang :