NATIONAL

தேசிய தூய்மை கொள்கை: தூய்மை, வளம், நீடித்த மலேசியாவை உருவாக்கும்!

மலாக்கா, நவம்பர் 3:

வரும் ஞாயிறன்று அறிமுகப்படுதப் படவிருக்கும் தேசிய தூய்மை கொள்கையை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தன்னையும் தன் குடும்பம், சமூகம் மற்றும் சமுதாயத்தையும் தூய்மையாக வைத்திருக்கும் கலாச்சாரம் அமல்படுத்தினால் மலேசியா ஒரு தூய்மைமிக்க நீடித்த வளமான நாடாகத் திகழும்.

அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் இக்கொள்கை 2030 வரை தொடரும் என்றும் இக்கொள்கை மீது 2025ஆம் ஆண்டில் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

“இந்த கொள்கையில் 5 முக்கிய அம்சங்கள் மற்றும் 14 வியூகங்கள் இடம்பெற்றுள்ளனர். இவற்றோடு இதன் அமலாக்கத்தை மத்திய அரசாங்கம், மாநில அரசு, ஊராட்சி மன்றங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் 87 நடவடிக்கை திட்டங்கள் துல்லியமாக நிறைவேற்ற 87 நடவடிக்கை திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.

“தூய்மை மீது விழிப்புணர்வு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நிர்வாகம் மற்றும் அமலாக்கம் மற்றும் திறனாற்றல்மிக்க தரமான மனித மூலதனம் ஆகியவையே இதன் முக்கிய 5 அம்சங்களாகும்” என்று அவர் விவரித்தார்.


Pengarang :