NATIONALRENCANA PILIHANSELANGOR

உதவி பெறுநர்களின் விவரங்களை ஒன்று திரட்ட மை ஐபிஆர் செயல் முறை உதவும்

ஷா ஆலம், நவ.13-

மக்கள் நல நடவடிக்கைகளின் (ஐபிஆர்) வழி பயனடைபவர்களின் விவரங்களை ஒன்று திரட்டுவதற்காக விரைவில் மை ஐபிஆர் திட்ட முறையை மாநில அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.
வரும் டிசம்பர் அல்லது 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்ட முறையானது அனைத்து ஐபிஆர் பெறுநர்களின் விவரங்களையும் ஒருசேர திரட்டும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் அமலாக்கத்தில் இருந்த ஐபிஆர் தரவில் பல்வேறு பலவீனங்கள் இருந்தன. பெறுநர்களின் விவரங்கள் அனைத்தும் ஒரு கூரைக்குள் திரட்டப்படவில்லை என்றார் அவர்.
எனவே தான், நாம் ஒவ்வொரு நிறுவனமாகச் சென்று சம்பந்தப்பட்ட பெறுநர்களின் விவரங்களைத் திரட்டி ஒரே தரவின் கீழ் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.


Pengarang :