Lim Guan Eng pada sidang media selepas pembentangan Belanjawan 2020 di Bangunan Parlimen hari ini. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

கட்டுப்படி வீடமைப்பு கடனுதவி வழங்க சிறப்பு வங்கி! அரசாங்கம் பரிசீலிக்கும்

கோலாலம்பூர், நவ.26-

கட்டுப்படி வீடுகளுக்கான கடனுதவி நடவடிக்கையை எளிமைப் படுத்த சிறப்பு வங்கி ஒன்றை நிறுவும் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. ஆயினும். கடனுதவி வழங்குவதற்கு போதிய நிதி வளத்தை சம்பந்தப்பட்ட வங்கி கொண்டிருக்க வேண்டும் என்ற பேங்க் நெகாராவின் விதிமுறைக்கு ஏற்ப அப்பரிந்துரை அமைந்திருப்பது அவசியம் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

இது போன்ற வீடமைப்பு கடனுதவிகளை வழங்குவதற்கு அதிக எண்ணிக்கையிலான வங்கிகள் தேவை பேங்க் நெகாரா எண்ணினால் இப்பரிந்துரை பரிசீலிக்கப்படும். மாறாக, சம்பந்தப்பட்ட வங்கி முழுமையான செயல்படும் தகுதியைக் கொண்டுள்ளதா என்பதை பிஎன்எம் மதிப்பிடும் என்றார் அவர்.
போதிய நிதிவளம் கொண்டிருப்பதால் மட்டுமே அனைத்து வகையான சவால்களையும் குறிப்பாக இந்த டிஜிட்டல் சகாப்த்ததில் எதிர்கொள்ள முடியும் என்று கருத முடியாது என்று அவர் விவரித்தார்.


Pengarang :