NATIONAL

தாபோங் ஹாஜி : மூன்றாம் காலாண்டில் ரிம.500 மில்லியன் லாபம்

கோலாலம்பூர், நவ.28-

தாபோங் ஹாஜி வாரியம் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 500 மில்லியன் ரிங்கிட்டை லாபமாக பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த யாத்திரை நிறுவனம் இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் 1.3 பில்லியன் ரிங்கிட் லாப அதிகரிப்பை பதிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிர்வாகச் செலவினம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆக்கப்பூர்வமான அடைவு நிலையை வாரியம் அடைந்துள்ளதாக வாரியம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
முதல் காலாண்டில் இவ்வாரியம் 500 மில்லியன் ரிங்கிட் லாபத்தை பெற்றதால், கடந்த ஓன்பது மாதங்களில் அடைந்த லாபத் தொகை 2.1 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது என்றும் அது தெரிவித்தது.

நிரந்தர வருமான சொத்து 1.1 பில்லியன் ரிங்கிட், சொத்துடைமையில் 400 மில்லியன் ரிங்கிட், பங்கு முதலீட்டில் 300 மில்லியன் ரிங்கிட் மற்றும் இஸ்லாமிய நாணய பரிவர்த்தனையில் 300 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ததன் விளைவாக இந்த அடைவுநிலையை பதிவு செய்ய முடிந்ததாக அவ்வற்றிக்கை விவரித்தது.


Pengarang :