KUALA LUMPUR, 30 Nov — Timbalan Perdana Menteri Datuk Seri Dr Wan Azizah Wan Ismail pada Sambutan Rumah Terbuka Deepavali Parlimen Pandan hari ini. — fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

துணைப் பிரதமர்: இனத்துவாதம் நமது மக்களிடையே புற்றுநோயாக வளர விடக்கூடாது !!!

கோலா லம்பூர், டிசம்பர் 1:

நற்பண்புகளை மக்களிடையே விதைக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் நினைவு படுத்தினார். இனத்துவாத சித்தாந்தம் மலேசிய மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடும் என்றும் புற்றுநோய் கிருமிகள் போல நாட்டை சீரழித்து விடும் என்று வலியுறுத்தினார்.

இது நாள் வரை மலேசிய மக்கள் நாட்டின் செழிப்பை பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சமத்துவம் மற்றும் வெளிப்படையான போக்கை கடை பிடித்து இருக்கின்றனர். இதுவே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் முக்கிய அம்சமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” நாட்டின் செழிப்பை பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வருகிறோம். மலேசியத் திருநாட்டின் மேம்பாட்டில் யாரும் தனிமைப்படுத்தப் படவில்லை. நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம். நாம் மலாய்க்காரர், சீனர் அல்லது இந்தியர் என்று சொல்லத் தேவையில்லை. நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற சிந்தனையில் முன்னேறுவோம். இதுவே, நமது ஒன்றுபட்ட மலேசிய நாட்டின் எதிர் காலம்,” என்று பண்டான் நாடாளுமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.

– BERNAMA


Pengarang :