Pelajar Politeknik Shah Alam menyertai Program Pembangunan Usahawan India Selangor (SITHAM) di kolej berkenaan pada 25 November lalu. Foto Facebook
SELANGOR

வர்த்தக நெளிவு சுளிவுகளை மாணவர்களுக்கு போதித்தது ‘சித்தம்’

ஷா ஆலம், டிச.3-

ஷா ஆலம் போலிடெக்னிக் கல்லூரியின் 600 மாணவர்கள் சிலாங்கூர் தொழில்முனைவர் மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி கடந்த நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. சமூக ஊடகம் வாயிலாக விற்பனையை அதிகரிக்கும் வியூகத்தைக் கற்பிப்பதே அப்பயிற்சியின் நோக்கமாகும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். ஜி. குணராஜ் கூறினார்.

வர்த்தக துறையில் தற்போது சமூக ஊடகம் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிக வருவாய் ஈட்டுவதற்கு உதவியாக இருப்பதால், பெரும்பாலான இளம் தொழில்முனைவர்கள் சமூக ஊடகங்களையே பயன்படுத்துகின்றனர் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கருத்துரைத்தார்.  காலை 9 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியை சமூக ஊடக நிபுணத்துவ பயிற்றுநர்கள் வழி நடத்தினர் என்றார் அவர்.


Pengarang :