KUALA LUMPUR, 4 Dis — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad dan isteri Tun Dr Siti Hasmah Mohd Ali hadir pada Majlis Makan Malam sempena 60 tahun Parlimen Malaysia di Bangunan Parlimen malam ini. Turut hadir Timbalan Perdana Menteri Datuk Seri Dr Wan Azizah Wan Ismail (dua, kiri) dan Ahli Parlimen Port Dickson, Datuk Seri Anwar Ibrahim (kiri). –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மனம் போல் செயல்பட முடியாது! – பிரதமர்

கோலாலம்பூர், டிச.5-

எவ்வித போராட்டமும் இன்றி அமைதியான முறையில் அரசாங்க மாற்றம் நடைபெற்றதானது நாட்டில் முடியாட்சியோடு கூடிய ஜனநாய நாடாளுமன்ற முறை சிறப்பாக அமலில் இருக்கிறது என்பதற்கான ஓர் ஆதாரமாகும்.

60 ஆண்டுகள் கடந்த பின்னரும் மலேசிய நாடாளுமன்றம் தொடர்ந்து மக்களின் அதிகாரத்தையும் குரலையும் பிரதிந்திதிக்கும் ஒரு கழகமாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

இது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்வதோடு ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பதில் நம்பிக்கையைக் கொண்டுள்ள ஜனநாயக நடைமுறையில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் வரையில் நாடாளுமன்றத்தை நிலைநிறுத்துவது அவசியமாகும் என்றார் அவர்.

“அரசாங்கத்தை வழி நடத்தும் அரசியல் கட்சி முதல் முறையாக மாறியுள்ள போதிலும், அதன் பாரம்பரியமும் ஜனநாயக நடைமுறையும் தொடர்ந்து பேணப்படும்” என்று நாடாளுமன்றத்தின் 60 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விருந்துபசரிப்பில் மகாதீர் தெரிவித்தார்.


Pengarang :