南里。
SELANGOR

எம்பிஎஸ்ஏ திடக் கழிவுப் பொருட்களை அகற்ற கேடிஇபி நிறுவனத்தின் 56 நவீன லாரிகள்

ஷா ஆலம், டிச.26-

ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் கழிவு பொருட்களை அகற்றும் நடவடிக்கைக்காக கேடிஇபி கழிவு நிர்வாக நிறுவனம் 56 முழு வசதி அமைப்பைக் கொண்ட நவீன லாரிகள் மற்றும் ஓர் ஆர்ம்ரோல் லாரியையும் தயாராகக் கொண்டுள்ளது.

இந்த நவீனத் தொழில்நுட்பம் நிறைந்த வாகனங்களால், பழைய வாகனங்களால் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கிய துணை குத்தகையாளர்களுக்கு ஒரு தீர்வு பிறந்துள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரம்லி தாஹிர் கூறினார்.
ஒவ்வொரு வாகனத்தின் நடவடிக்கையையும் கண்காணிப்பு மையத்தில் இருந்து கொண்டே அறியவும் கண்காணிக்கவும் வகையிலான தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என்று அதன் தலைமையகத்தில் அவர் தெரிவித்தார்.

எம்பிஎஸ்ஏ நிர்வாகப் பகுதியில் உள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் முழு வசதி நிறைந்த குப்பை அகற்றும் லாரியை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் மேற்கொண்டவாறு பேசினார்.


Pengarang :