NATIONALSELANGOR

இணையம் மூலம் சட்டவிரோத சூதாட்டம்: சிலாங்கூர் முதலிடம்!

ஷா ஆலம், ஜன.7-

இணையம் மூலமாக சூதாட்டம் நடத்திய குற்றத்திற்காக கடந்தாண்டு பிடிபட்டவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சிலாங்கூர், சரவாக் மற்றும் சபா இடம்பெற்றுள்ளன. சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட 1,108 அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டதில் 2,434 பேர் பிடிபட்டனர். மேலும் 276,582 ரிங்கிட் ரொக்கம் கைப்பற்றப்பட்ட வேளையில் 243 கணினிகள், டேப்ளட்டுகள் மற்றும் கைப்பேசிகள் போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று புக்கிட் அமான் குற்றவியல் புலன்விசாரணை பிரிவு இயக்குநர் டத்தோ ஹுஸிர் முகமது கூறினார்.

இதற்கு அடுத்த நிலையில், சரவாக்கில் நடத்தப்பட்ட 704 சோதனை நடவடிக்கைகளில் 157,983 ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில், சபாவில் மேற்கொண்ட 436 சோதனை நடவடிக்கைகளில் 584 பேர் கைது செய்யப்பட்டதோடு 165,911 ரிங்கிட் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.

“நாடு முழுவதிலும் கடந்தாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 11ஆம் தேதி வரையிலும், கள்ள சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3,813 நிறுவனங்கள் மீது மேற்கொண்ட சோதனைகளின் போது மொத்தம் 6,932 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றார் அவர்.
மொத்தம் 1.36 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் வேளையில் 12,988 கணினிகள், டேபளட்டுகள் மற்றும் கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.


Pengarang :