Dato’ Seri Mohamed Azmin Ali ketika ditemui media selepas Persidangan Perdagangan Asia Selangor kali ke-3 2019 pada 10 Oktober 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

2030 கூட்டு வளப்ப தூரநோக்கு திட்ட அமலாக்கம் மீது அமைச்சரவை கூட்டம் கவனம் செலுத்தியது

கோலாலம்பூர், ஜன.9-

புத்ராஜெயாவில் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் 2030 கூட்டு வளப்ப இலட்சிய திட்டத்தை (டபள்யூகேபி 2030) வெற்றியடையச் செய்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதித்தது. இக்கூட்டம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையில் நடைபெற்றதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது ஜூக்கி அலி தெரிவித்தார்.

தனது இன்ஸ்டாகிராமில் இத்தகவலைப் பகிர்ந்து கொண்ட முகமது ஜூக்கி இக்கூட்டம் தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார்.
2030 கூட்டு வளப்ப இலட்சிய திட்டம் வெற்றியடைய அரசு ஊழியர்களின் பிளவுபடாத ஆதரவு தேவை என்று அமைச்சரவை கூட்டத்தின் செயலாளராகக் கலந்து கொண்ட அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சர் பதவியில் இருந்து டாக்டர் மஸ்லி மாலிக் கடந்த வாரம் விலகியதைத் தொடர்ந்து இவ்வாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.


Pengarang :