SELANGOR

அனுமதியின்றி கட்டடம் நிர்மாணித்த தனிநபருக்கு ரிம. 10,000 அபராதம்

பந்திங், ஜன.10-

முறையான அனுமதியின்றி மலையோரப் பகுதியில் கட்டடத்தை நிர்மாணித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட தனிநபர் ஒருவருக்கு தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரிம. 10,000 அபராதம் விதித்தது.
கோல லங்காட் மாவட்ட மன்ற (எம்டிகேஎல்) வழக்கு பதிவதிகாரி முன்னிலையில் இந்த ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று எம்டிகேஎல் தலைவர் முகமது ஜெயின் ஏ, ஹமீட் கூறினார்.

அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படுவதோடு 2 மாதச் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1974ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டட சட்டத்தின் 70(13) சி பிரிவின் புரிந்த இந்தக் குற்றத்தைப் புரிபவர்கள் வழக்கு தொடுக்கப்பட்ட 12 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட கட்டடத்தை தகர்த்து எறிய வேண்டும் என்றார் முகமது ஜெயின் தெரிவித்தார்.

இச்சட்ட விதியை மீறும் உரிமையாளர், நடத்துநர் அல்லது மேம்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.

“எனவே, ஒரு கட்டடத்தை நிர்மாணிக்கவோ சீரமைக்கவோ எண்ணும் எவரும் எம்டிகேஎல் அனுமதியைப் பெறுவது அவசியம்” என்றார் அவர்.


Pengarang :