PBTSELANGOR

புகைப்பிடிப்பதற்கான பிரத்தியேக பகுதி, இரு ஊராட்சி மன்றங்கள் தயார்!

ஷா ஆலம், ஜன.10-

வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமாருடின் அண்மையில் பரிந்துரைத்தது போல் புகைப்பிடிப்பதற்கு பிரத்தியேக பகுதியைத் தயார் செய்ய மாநிலத்தின் இரு ஊராட்சி மன்றங்கள் தயாராக உள்ளன. பொது இடத்தில் புகைப்பிடிப்பதற்கான பிரத்தியேக பகுதியை நிர்மாணிக்க தமது தரப்பு பொருத்தமான இடங்களைக் கண்டறியும் என்று கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத் (எம்டிகேஎஸ்) தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

சந்தாய்@அம்பாங் மற்றும் செனாரியோ அம்பாங் ஆகிய முன்மாதிரிக் கொள்கையைத் தமது தரப்பு ஆராயும் என்றார் அவர். “இந்தத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்வதை எம்டிகேஎஸ் வரவேற்பதோடு பொருத்தமான பகுதியை அடையாளம் காணும்” என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.

எனினும், இது போன்ற பகுதிக்கான ஒரு நிரந்தர கட்டுமானத்தை நிர்மாணிக்க எண்ணும் உணவக உரிமையாளர்கள் தங்கள் திட்டத்தின் சொந்த மாதிரியைப் பயன்படுத்தவதோடு எம்டிகேஎஸ் முன் அனுமதியைப் பெறுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :