Dato’ Seri Amirudin Shari menandatangani buku Draf Rancangan Tempatan Daerah Hulu Selangor (Penggantian) 2035 di Kuala Kubu Bharu, Hulu Selangor pada 3 Februari 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
SELANGOR

2035ஆம் ஆண்டுக்குள் உலு சிலாங்கூர் வட பகுதி மேம்பாட்டு வாயிலாகத் திகழும்!

உலு சிலாங்கூர், பிப்.3-

உலு சிலாங்கூர் மாவட்டம் 2035ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் வடக்கு பகுதி மேம்பாட்டு வாயிலாக மேம்படுத்தப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். முன்பு, இங்கு தடைப் பட்டுப் போன சில மேம்பாட்டு திட்டங்களும் வீடமைப்புத் திட்டங்களும மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்றார் அவர்.

பண்டார் புக்கிட் பெருந்தோங், பண்டார் புக்கிட் செந்தோசா, பண்டார் சுங்கை புவாயா மற்றும் லெம்பா பெரிங்கின் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

“இதில் 2,336 வீடுகள், 1,105 தொழில்துறை கட்டங்கள் மற்றும் 787 வர்த்தக தலங்களும் அடங்கும்” என்று இங்கு கோல குபு பாருவில் உலு சிலாங்கூர் மாவட்ட வரைவு திட்ட தொடக்க நிகழ்ச்சியில் அமிருடின் தெரிவித்தார். ஆதே வேளையில், உலு சிலாங்கூர் மேம்பாட்டு திட்டத்தின் போது சுற்றுச் சூழலும் பேணப்படுவது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.


Pengarang :