Perayaan Thaipusam akan disambut masyarakat beragama Hindu di seluruh negara pada 8 Februari ini. Foto SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

தைப்பூச வெள்ளி இரத ஊர்வலம் நாளைத் தொடங்கும்!

கோலாலம்பூர், பிப்.5-

இங்குள்ள ஜாலான் துன் எச்.எஸ். லீயில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நாளை இரவு மணி வெள்ளி இரதம் புறப்பட்டு வெள்ளிக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் பத்துமலையைச் சென்றடையும். இதனைத் தொடர்ந்து சில சாலைகள் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்திற்கு மூடப்பட்டு இரத ஊர்வலம் அப்பகுதியைக் கடந்ததும் மீண்டும் திறக்கப்படும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுத் தலைவர் ஏசிபி ஜுல்கிப்ளி யாயா கூறினார்.

ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் இருந்து புறப்படும் ஊர்வலம் ஜாலான் சுல்தான், ஜாலான் துன் பேராக், ஜாலான் லெபொ அம்பாங், ஜாலான் அம்பாங், ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் டாங் வாங்கி , ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் ஈப்போ, ஜாலான் பெர்ஹெந்தியான், ஜாலான் ஈப்போ, ஜாலான் ஈப்போ பத்து 5 ஆகிய வழிகளில் சென்று பத்துமலையைச் சென்றடையும் என்றார் அவர்.

“அதே வேளையில், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு பத்துமலையிருந்து புறப்படும் வெள்ளி இரதம், ஜாலான் துன் எச். எஸ். லீயில் இருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு மறுநாள் காலை மணி 5 க்கு திரும்ப வந்து சேரும்” என்று ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

“பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து புறப்படும் இரத ஊர்வலம் ஜாலான் ஈப்போ பத்து 5, ஜாலான் ஈப்போ, ஜாலான் பெர்ஹெந்தியான், ஜாலான் துன் ரசாக், ஜாலான் ஈப்போ, ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் அம்பாங், ஜாலான் லெபொ அம்பாங், ஜாலான் துன் ஒஏராக், ஜாலான் சுல்தான், ஜாலான் ஹங் கஸ்தூரி, ஜாலான் ஹன் லெகிர் வழியாக வந்து ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை வந்தடையும்” என்றார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க சாலை பயனீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட சாலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :