NATIONALRENCANA PILIHAN

ஜனநாயக குறியீட்டு பட்டியலில் மலேசியாவிற்கு 43ஆவது இடம்

கோலாலம்பூர், பிப்.4-

உலகின் 167 நாடுகள் இடம்பெற்றுள்ள ஜனநாயக குறியீட்டு பட்டியலில் 2018 ஆம் ஆண்டில் 52ஆவது இடத்தில் இருந்து மலேசியா கடந்தாண்டு 43ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனநாயக குறியீட்டு அறிக்கையில் பொருளாதார தரவு பிரிவு வெளியிட்டுள்ள தகவலின் படி மலேசியா அதிக பட்ச புள்ளியான 10க்கு 7.16 புள்ளியைப் பதிவு செய்துள்ளது இதுவரை அடைந்த அடைவு நிலைகளில் இது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது..

பொது தேர்தல் நடவடிக்கை, பண்முகத் தன்மை, அரசாங்க செயல்பாடு, அரசியல் ஈடுபாடு மற்றும் அரசியல் கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்ததில் நாடு இந்த சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளது.
2006ஆம் ஆண்டு இக்குறியீடு தொடங்கப்பட்டது முதல், மேற்கத்திய நாடுகளில் மோசமடைந்து வரும் ஜனநாயக அமலாக்கம் குறித்து வலியுறுத்தி வந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க நாட்டை முழு ஜனநாயக நாடு என்ற அந்தஸ்தில் இருந்து ஊணமுற்ற ஜனநாயகம் என்று 2016ஆம் ஆண்டு இந்த குறியீட்டு அமைப்பு வகை படுத்தியுள்ளது.


Pengarang :