Dato’ Seri Amirudin Shari pada sidang media selepas Mesyuarat Majlis Tindakan Ekonomi Selangor di SUK, Shah Alam pada 6 Februari 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது: நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் எண்ணம் இல்லை!

ஷா ஆலம், பிப்.6-

நாட்டில் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதால் பொது இடங்களில் பெரிய எண்ணிக்கையில் பொது மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளை சிலாங்கூர் ரத்து செய்யாது.
“நிகழ்ச்சிகளை ரத்து செய்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. ஆயினும் சம்பந்தப்பட்ட வைரஸ் பரவலை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“அதிகளவில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் சூழல் இன்னும் ஏற்பாடவில்லை. நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.
“அதே வேளையில், இந்நோய் பீடிக்கப்பட்ட நோயாளிகளில் சிலர் குணமடைந்துள்ளனர். இந்நிலை தொடரும் என எதிர்பார்ப்போம்” என்று சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமிருடின் தெரிவித்தார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்க பொது மக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்க ஜோகூர் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது.


Pengarang :