Sempena Forum Bandar Sedunia ke-10 (WUF10), Dato’ Seri Amirudin Shari berkongsi pandangan serta menelusuri sejarah dan pengalaman Selangor di Pusat Pameran Antarabangsa Abu Dhabi. Foto: Facebook Amirudin Shari
RENCANA PILIHANSELANGOR

10ஆவது உலகளாவிய நகர மாநாடு: சிலாங்கூரின் அனுபவங்களை மந்திரி பெசார் விவரித்தார்

ஷா ஆலம், பிப்.12-

அனைத்துலக அபு டாபி வர்த்தக மையத்தில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தைப் பிரதிநிதித்து அதன் நீடித்த மேம்பாட்டு இலக்கு அறிக்கையை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சமர்ப்பித்தார்.
10ஆவது உலகளாவிய நகர மாநாட்டை முன்னிட்டு சிலாங்கூரின் நீடித்த மேம்பாட்டு இலக்கு மற்றும் அதன் அனுபவம் ஆகியவற்றை அமிருடின் பகிர்ந்து கொண்டார்.

இம்மாநாட்டில் ஆசிய பசிபிக் ஐக்கிய மாநகரங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களின் பொது செயலாளர் டாக்டர் பெர்மாடா இராவாத்தி மற்றும் ஐக்கிய நாட்டு ஆசிய பசிபிக் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையர் கெர்ட் கெரிகன் ஆகியோரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக தனது முகநூலில் அமிருடின் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக , ஜப்பான் நகரை மேம்படுத்தியது தனது அனுபவங்களை இஜி இஎஸ் இயக்குநர் டாக்டர் ஜுனிச்சி ஃபுஜினோ பகிர்ந்து கொண்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :