ஷா ஆலம், மார்ச் 3-
இங்குள்ள செக்க்ஷன் 2 பெஸ்தாரி வட்ட சாலை கடந்த மார்ச் முதல் தேதி அன்று போக்குவரத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டது என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் அறிவித்தது.சீரமைப்புப் பணிகளுக்காக அச்சாலை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி மூடப்பட்டிருந்தது என்று எம்பிஎஸ்ஏ தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
“சம்பந்தப்பட்ட பணி நிறைவு பெறுவதற்கு சற்று தாமதமானதற்கு எம்பிஎஸ்ஏ சார்பில் மன்னிப்பு கோருகிறேன்” என்றார் அவர்.
ஆயினும், சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் இச்சாலையில் போக்குவரத்து வசதியாக இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.